Home இலங்கை அரசியல் இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: உடன் செயற்பட ஆரம்பித்த சீன அரசாங்கம்!!

இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: உடன் செயற்பட ஆரம்பித்த சீன அரசாங்கம்!!

0

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு சீனா உடன் பதிலளிக்க தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிஸக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை சீனா ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் புதிய பாதுகாப்பு கூட்டணி

அத்தோடு, எழுபது ஆண்டுகளாக இலங்கை எந்த நாட்டுடனும் இதுபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், இது வரலாற்றில் மிக மோசமான துரோகம் ஜயகொட அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம், சீனா இலங்கையை ஒரு இந்திய-அமெரிக்க நட்பு நாடாகக் கருதத் தொடங்கியுள்ளது என்றும், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் புதிய பாதுகாப்பு கூட்டணியை நிறுவத் தொடங்கியுள்ளது என்றும் புபுது ஜயகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version