Home இலங்கை பொருளாதாரம் இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த படிநிலை: நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

இலங்கை பொருளாதாரத்தின் அடுத்த படிநிலை: நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

0

இந்த ஆண்டின்(2025) நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர்,

“2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் மையப் பகுதிக்குத் திரும்பும். நிதி அமைச்சகத்துடனான திட்டங்களின்படி இது 5% ஆக நிர்ணயிக்கப்படும்.

[V1MUYRY
]

கடன் மீட்பு

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணவாட்டத்தையும்(Deflation) ஒரு திருத்தமாகப் பதிவு செய்யப்படலாம்.

மேலும், தனியார் துறையிக் கடன் மீட்புக்கள் தொடரும். அரசாங்கத்தின் ஆவணக் கொள்கை இதற்கு உதவுவதாக காணப்படும்.

இதற்கமைய சாதகமான வணிகச் சூழல், உள்நாட்டு விலைகளைப் பாதிக்கும் வெளிப்புற அபாயங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version