Home இலங்கை இணையவழி விசா முறைமை தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

இணையவழி விசா முறைமை தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

0

இலங்கைக்கு (Sri Lanka) இணையவழி விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.

குடிவரவுத் திணைக்களத்தின் கணனி முறைமைகளானது புதிய நடைமுறைகள் மற்றும்
கட்டணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பழைய
முறைமையின் கீழ் விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், அண்மையில் திருத்தப்பட்ட ஒன்லைன் இணையவழி சட்டமூலத்தை அரசாங்க
வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.

மேலும், இணையவழி விசா முறைமையில்
திருத்தங்கள் பல மேற்கொள்ளவுள்ளதாகவும் மற்றும் திருத்தப்பட்ட மசோதா விரைவில்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் டிரான் அலஸ் அண்மையில்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version