Home இலங்கை குற்றம் இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தானிய கைதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தானிய கைதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் (Pakistan) கைதிகளின் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான செலவை, தமது நாடே ஏற்றுக்கொள்ளும் என்று பாகிஸ்தான் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அப்துல் அலீம் கான் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் பாகிஸ்தானிய மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோருக்கு இடையில், கடந்த மே மாதம் நடைபெற்ற சந்திப்பில், தமது நாட்டின் 43 கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

நிதிப் பிரச்சினை

ஆனால், நிதிப் பிரச்சினை காரணமாக அவர்களின் விடுதலை தாமதமானது.

இந்தநிலையே பல ஆண்டுகளாக இலங்கையில் தடுத்து வைக்கப்படுள்ள பாகிஸ்தான் கைதிகளை நாடு திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்கும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அப்துல் அலீம் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தரப்பு தகவல்படி, கிட்டத்தட்ட 14,000 பாகிஸ்தான் குடிமக்கள் உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version