இலங்கை நாடாளுமன்றின் 175 உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்
மாத்திரமே, கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஆணையகத்தின் கோரிக்கையின் பேரில் நாடாளுமன்ற
அதிகாரிகள் நேற்று (27) இந்த அறிவிப்புகளை ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையின் 10வது நாடாளுமன்றில் 225 பேர் அங்கம் வகிக்கின்ற போதும், 175 பேர்
மட்டுமே சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை
சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
