Home இலங்கை அரசியல் முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கருத்துக்கணிப்புக்களை தேர்தல்கள் ஆணையகம் எதிர்க்கிறது
இந்தநிலையில், ஹெலகுரு (Helakuru) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி (IHP) ஆகியவை கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

கருத்துக்கணிப்புக்கள்

ஹெலகுரு என்பது ஒரு பிரபலமான சிங்கள மொழி செயலியாகும்.
இந்த செயலியின் கணிப்பின்படி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 80வீத வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி, அநுரகுமாரவுக்கு 37 வீத வெற்றி கிடைக்கும் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு 36 வீத வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

இருப்பினும், கடைசி நிமிட அரசியல் மாற்றங்களைக் கணக்கிட இயலாமை காரணமாக இந்த கருத்துக்கணிப்புக்களை விமர்சகர்கள் நிராகரித்துள்ளனர்.

செயற்கையான தலையீடு

குறிப்பாக ஹெலகுரு செயலிக்கு 30ஆயிரம் பேர் தமது கருத்துக்களை கூறினாலும், அதில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹெலகுரு தங்கள் செயலியின் பயனர்களை நம்பியிருப்பதால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர் என்ற விடயமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்புகள், தேர்தலில் ஒரு செயற்கையான தலையீடு என்று தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version