Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் – செய்திகளின் தொகுப்பு

0

அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல்
5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம்
செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் ஒவ்வொரு
ஊழியருக்கும் 15,000 ரூபா கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யவும் அவர்களது சம்பளத்தை அடுத்த
வருடம் முதல் திருத்துவதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன
தலைமையில் குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி
தேர்தலுக்கு முன்னதாக இந்த வருடம் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி
குழுவிடம் பரிந்துரைத்துள்ளதுடன் இந்தக் குழுவும் மற்றும் நிதியமைச்சும்
இந்தப் பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி தனது கருத்தை
மாற்றிக்கொள்ளவில்லை.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version