Home இலங்கை கல்வி அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

0

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமித் உடுக்கும்புற வாய்மொழி மூலமாகக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

கனடாவிலிருந்து சென்ற விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

புதிய ஆட்சேர்ப்புகள் 

நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதிலும் இருந்து 277 பேர் மாத்திரமே பணிபுரிவதாக
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தொகை போதுமானது அல்ல என்றும் புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெறுவதுடன் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களுக்குள் எடுக்கவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

வடக்கிற்கான விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version