Home முக்கியச் செய்திகள் இனிய பாரதியின் நெருங்கிய சகா கொழும்பில் அதிரடி கைது

இனிய பாரதியின் நெருங்கிய சகா கொழும்பில் அதிரடி கைது

0

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதியின் முக்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் கொழும்பில் (Colombo) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவம் தொடர்பாக இனிய பாரதி என்றழைக்கப்படும் கந்தையா புஷ்பராஜா தற்போதைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Cid) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

இந்த நிலையில் இனிய பாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவரது முக்கிய நண்பர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர், இனிய பாரதி மேற்கொண்ட படுகொலைகளின் துப்பாக்கிதாரியாக இருந்துள்ளதுடன், பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த கைது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version