Home முக்கியச் செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது மதிய உணவை அளித்த கைதிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது மதிய உணவை அளித்த கைதிகள்

0

  கொழும்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் இன்று (1) தங்கள் மதிய உணவை நன்கொடையாக வழங்கினர்.

நன்கொடையில் 750 கிலோ அரிசி, 100 கிலோ கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, பருப்பு, சீனி மற்றும் பிற பொருட்கள் அடங்கும்.

கொழும்பு துணை மேயரிடம் கையளிப்பு

இவ்வாறு வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் கொழும்பு துணை மேயர் ஹேமந்த குமாரவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

வெலிக்கடை சிறைச்சாலையின் ஆண் மற்றும் பெண் பிரிவுகளைச் சேர்ந்த 3874 கைதிகள், சிறை நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தங்கள் மதிய உணவை ஏழை மக்களுக்கு வழங்கினர்.

கொழும்பு நகராட்சி மன்ற உறுப்பினர்கள், சிறை அதிகாரிகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

NO COMMENTS

Exit mobile version