Home இலங்கை குற்றம் புத்தளத்தில் நூதன முறையில் பண மோசடி: 6 இளைஞர்கள் கைது

புத்தளத்தில் நூதன முறையில் பண மோசடி: 6 இளைஞர்கள் கைது

0

புத்தளம் பகுதியில் வங்கி கணக்கு இரகசிய இலக்கம்(OTP) மூலம் பணமோசடியில்
ஈடுப்பட்ட 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள், பொதுமக்களிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகளை மேற்கொண்டு
பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக வங்கி கணக்கு அட்டையின் இரகசிய
இலக்கத்தைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பெறுமதியான பரிசில்கள் தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

சந்தேகத்தின் பேரில் கைது

முறைப்பாட்டிற்கு அமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு
பிரிவினர் 6 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா பணம், 6
கையடக்கத் தொலைப்பேசிகள், 9 வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள 6 பேரும் புத்தளம் பாலாவி மற்றும் கரம்பை
பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்குற்பட்டவர்கள் என பொலிஸார்
தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version