Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற இணையத்தள தவறு தொடர்பில் பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரணை

நாடாளுமன்ற இணையத்தள தவறு தொடர்பில் பொறுப்பில் உள்ளவர்களிடம் விசாரணை

0

Courtesy: Sivaa Mayuri

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்கு முன்னால் வரும் கல்வி தகைமைத் தலைப்புகள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயன்முறை நடந்து வருகிறது.

அத்துடன், ஏற்பட்ட தவறுகளுக்கு, இணையத்தில் தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் நாடாளுமன்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறை சரி செய்ய நடவடிக்கை

எனினும், நாடாளுமன்றத்திற்கு வழங்கிய தகவல்களில் ஹர்ஷன நாணயக்கார, தாம் கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடவில்லை.

எனவே, அமைச்சரின் பெயருக்கு முன்னால் கலாநிதி தலைப்பு தோன்றியதற்கு, தொடர்புடைய தரவை உள்ளிடுவதில் ஏற்பட்ட தவறே காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தவறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version