Home இலங்கை சமூகம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழில் விநியோகம்

0

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ்.ஊடக அமைய
ஊடகவியலாளர்களால் யாழில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால்
இன்றைய தினம்(13) காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை
சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு
சட்டம் நடைமுறையில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள்
அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு
வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.

விசாரணை அறிக்கை

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,
அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து
வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் .
ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version