Home இலங்கை கல்வி மரம் விழுந்து பலியான மாணவன்! பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

மரம் விழுந்து பலியான மாணவன்! பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

0

பாடசாலை அதிபர்களுக்கு பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

இதன்படி, பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது மரக் கூட்டுத்தாபனத்துக்கு உடன் அறிவிக்குமாறு பிரதி கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பலாங்கொடை ரஜவக்க வித்தியாலயத்தின் கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்த சம்பவம் குறித்து நேரில் ஆராய்வதற்குக் குறித்த பாடசாலைக்கு சென்றபோது பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுறுத்தல்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆபத்தான மரங்கள் குறித்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் விரைவான மற்றும் பொறுப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

பலாங்கொடை ரஜவக்க வித்தியாலயத்தின் கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்த சம்பவத்தில் 17 வயதுடைய மாணவர் ஒருவன் உயிரிழந்ததுடன், மேலும் 17 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version