கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
இந்த திட்டத்திற்கு காப்புறுதி நிறுவனம் ஒன்று ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பின்னர் கடற்றொழிலாளர்களுக்கு இந்த காப்புறுதி வழங்கப்படும் எனவும் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், மொத்த மற்றும் பகுதியளவு சொத்து சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டால் குறித்த காப்புறுதி வழங்கப்படும் வகையில் இத்திட்டம் அமையும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
