Home இலங்கை அரசியல் ரணிலை பழிவாங்கிய அரச அதிகாரிகள் – முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ரணிலை பழிவாங்கிய அரச அதிகாரிகள் – முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனம் காப்பீட்டை செலுத்துவதனை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, அவரது உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காப்பீட்டு சான்றிதழ்

மேலும் செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் குறித்த உத்தியோகபூர்வ காரை ரணில் ஓட்ட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முன்னாள் ஜனாதிபதி தற்போது தனது பயணங்களுக்கு வேறொரு தனியார் காரைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்

NO COMMENTS

Exit mobile version