Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழு காப்பீட்டு வரம்பை திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

குறித்த முன்மொழிவை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் காப்பீட்டு ஆண்டு முதல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான காப்பீட்டுப் பலன் 250,000 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம்

கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 1 மில்லியன் ரூபா அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை வழங்க அப்போதைய அமைச்சரவை 15.05.2023 அன்று ஒப்புதல் அளித்திருந்தது.

இதற்கமைய, கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, காப்பீட்டு வரம்பை 250,000 ரூபாவாக வரையறுப்பதற்கு ஜனாபதிபதி முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version