Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு – உள்நாட்டு கடன்களுக்கான வட்டி: செலவிடப்பட்டுள்ள மொத்த பணம்

வெளிநாட்டு – உள்நாட்டு கடன்களுக்கான வட்டி: செலவிடப்பட்டுள்ள மொத்த பணம்

0

இந்த வருடத்தின் (2024) முதல் எட்டு மாதங்களில் 1,559.7 பில்லியன் ரூபா வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தலுக்கு முந்தைய வரவு செலவுத் திட்டத்தின் நிலை குறித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டிச் செலவு அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியை செலுத்த 1,525.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

இதன்படி, கடந்த கடந்த வருடத்தின் (2023) முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் (2024) முதல் எட்டு மாதங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டிச் செலவு 34 பில்லியன் ஆக 2.2 வீதத்தால் அதிகரித்துள்ளது.

உள்நாட்டுக் கடனுக்கான வட்டி செலவு

இதேவேளை, இந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி செலவுகள் மாத்திரம் 100 பில்லியனாக 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 1,451.6 பில்லியன் ரூபாவாக இருந்த உள்நாட்டுக் கடனுக்கான வட்டி செலவு இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 1459.7 பில்லியன் ரூபாவாக 0.6 வீதத்தால் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version