Home முக்கியச் செய்திகள் மன்னாரில் நடந்த துயர சம்பவம் : சர்வதேச விருது வென்ற ”மடமை தகர்” குறுந்திரைப்படம்

மன்னாரில் நடந்த துயர சம்பவம் : சர்வதேச விருது வென்ற ”மடமை தகர்” குறுந்திரைப்படம்

0

மன்னாரில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறினால் 14 வயது சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் விருது பெற்ற “மடமை தகர்“ குறுந்திரைப்படத்தின் இயக்குநர் தெரிவித்தார். 

ஐபிசி தமிழின் உலகாளும் தமிழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அந்தவகையில் “தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல“ என்பதை மையக்கருவாகக் கொண்டு இக்குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இக்குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இக்குறுந்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா சிறந்த ஒற்றை நடிப்புக்கான (Best Monologue) விருதை சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் வென்றுள்ளார்.

குறுந்திரைப்படம் சார்ந்த பல்வேறு விடயங்களையும் அதற்குப் பங்காற்றியவர்களின் அனுபவங்களையும் கீழுள்ள காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/h6PTBCvCqx0

NO COMMENTS

Exit mobile version