Home இலங்கை சமூகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் முன்னெக்கப்பட்ட போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் முன்னெக்கப்பட்ட போராட்டம்

0

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் 

குறித்த போராட்டமானது இன்றையதினம் (10.12.2024) யாழ்ப்பாணம் (Jaffna) பொதுசன நூலக மூன்றலில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள்

இதன் போது வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர்,
பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வவுனியாவிலும்  (Vavuniya) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீச்சட்டி ஏந்தியவாறு வவுனியா – கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் நிறைவடைந்தது.

https://www.youtube.com/embed/TM00M5lT7FI

NO COMMENTS

Exit mobile version