நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை (Sri Lanka) ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மூன்று நாள் பயணமாக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.
குறித்த அரசியல் பயணமானது சர்வதேச அளவில் மிகவும் பேசு பொருளாக காணப்பட்டது.
காரணம், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் எந்த நாட்டுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க போகின்றார் என சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.
சீனாவுக்கு (China) சார்பான இடதுசாரிக்கொள்கையை கடைபிடிக்கும் ஒரு கட்சியாக அநுர குமார திஸாநாயக்கவின் கட்சி காணப்படுவதால் அவரது முதல் பயணம் சீனாவை நோக்கி இருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தினர்.
இருப்பினும், அவரது முதல் தெரிவாக இந்தியா (India) காணப்பட்ட நிலையில் தற்போது தனது இரண்டாவது பயணத்தை சீனாவை நோக்கி முன்னெடுத்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவை தாண்டிலும் அநுரவின் சீனா விஜயத்தின் பக்கம் பாரிய பார்வை திரும்பியுள்ளதுடன் இந்த பயணம் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்தும் பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து கனடாவின் (Canada) அரசியல் ஆய்வாளர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/KlvwPe4WHok