ராஜபக்சர்களை மிக நெருக்கமானவர்களாக கருதிய சீன அரசாங்கம், அவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை விவகாரத்தில் சிறிது மௌனம் காத்து வந்தது.
தற்போது, ஆட்சியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அமர்ந்ததன் பின்னர், சீனாவின் தூதுவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மேலும், அநுரவின் இந்தியா விஜயத்தின் போதான உள்ளடக்கங்களை விட சீனா விஜயத்தின் போதான உள்ளடக்கங்கள் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.
இதனால், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அவதானிப்பார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆட்சி முறைக்கு நிகரான பல செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,