Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதிய மூன்றாவது மீளாய்வு தொடர்பில் முன்னாள் ஆளுநரின் எதிர்வு

சர்வதேச நாணய நிதிய மூன்றாவது மீளாய்வு தொடர்பில் முன்னாள் ஆளுநரின் எதிர்வு

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்(
Anura Kumara Dissanayake) வழங்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியின் மூன்றாவது மீளாய்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த பொருளாதார நிபுணரும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான இந்திரஜித் குமாரசுவாமி(Indrajit Coomaraswamy) இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று தற்போது இலங்கையில் தங்கியுள்ளது.
இந்தக்குழு, பிணை எடுப்புப் பொதியின் மூன்றாவது மதிப்பாய்வை நடத்துகிறது.

மதிப்பாய்வின் புதுப்பிப்பு

இந்தநிலையில், குறித்த குழுவினர், தமது மதிப்பாய்வின் புதுப்பிப்பை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்பார்கள்; என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில் பணியாளர் அளவிலான ஒப்புதலைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற இன்னும் 8 முதல் 10 வாரங்கள் ஆகலாம் என்று இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதன்படி 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் நான்காவது தவணையின் கீழ் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் விவாதித்திருக்கலாம் என்று குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத் தேர்தல் நிலுவையில் இருந்தமையால், மூன்றாவது மதிப்பாய்வில் தாமதம் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்திரஜித் குமாரசுவாமி ஒப்புக்கொண்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version