Home இலங்கை குற்றம் டுபாயில் தலைமறைவாகியுள்ள இருவருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு

டுபாயில் தலைமறைவாகியுள்ள இருவருக்கு சிவப்பு பிடியாணை உத்தரவு

0

சர்வதேச பொலிஸார் ஊடாக டுபாயில் தலைமறைவாகியுள்ள சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிவப்பு பிடியாணை உத்தரவினை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக, கொழும்பு, கிரேண்ட்பாஸ் – படுவத்தை பகுதியில் 56 வயதான பெண்ணையும் அவரது 31 வயதுடைய மகளையும் சுட்டுக்கொல்ல உத்தரவு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தவர்களுக்கு எதிராகவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், டுபாயில் பதுங்கியிருந்த இரண்டு குற்றவாளிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

சிவப்பு பிடியாணை

சந்தேகநபர்கள் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச்சூடு, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு பிடியாணையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version