2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடரில் கிரிக்கெட்டையும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் குழாமுடன் (International Olympic Council) பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டின் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை (Youth Olympic Games) மும்பையில் நடத்துவதற்கு கடந்த ஆண்டு இந்திய அரசாங்கம் (Indian Government) முயற்சியை மேற்கொண்டது.
இந்தியப் பிரதமர் ஆர்வம்
அதேபோன்று 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் மும்பையில் (Mumbai) நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இளையோர் ஒலிம்பிக் போட்டியினை இந்தியாவில் நடத்துவதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியினையும் இந்தியாவில் நடத்துவதற்கான ஆர்வத்தினை கடந்த இந்திய சுதந்திர தின உரையின் போது இந்திய பிரதமர் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.