Home இலங்கை அரசியல் இலங்கையின் வாக்குச்சீட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவுரை

இலங்கையின் வாக்குச்சீட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அறிவுரை

0

இலங்கையில் தேர்தல் கண்காணிப்புப் பணியில் அங்கம் வகிக்கும் ரஷ்யாவின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஷெவ்சென்கோ எவ்ஜெனி(Shevchenko Evgenii), இலங்கையில் காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் (ரஷ்யா) காகித வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகள் மூலம் மின்னணு வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம், இதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணையத்துடன் விவாதிக்கப்படவுள்ளது.

 

 

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் திட்டத்தில் நெறிமுறை பார்வையாளர்களாக பங்கேற்க ஏழு நாடுகளுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் முறையான அழைப்புகளை விடுத்துள்ளது.

ரஷ்யா, மாலைத்தீவு, பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர், பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட இலங்கையில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சர்வதேச மேற்பார்வையாளர்கள் வருகை தரவுள்ளதாக மாலைதீவு தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஃபுவாட் தௌஃபீக் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் அமைப்பை மேற்பார்வையிடுவதும், அது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதையும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் இருப்பதையும் உறுதி செய்வதே நோக்கம் ஆகும்.

நாங்கள் தேர்தலை கண்காணித்து, அங்கீகரிக்கப்படாத அல்லது விரும்பத்தகாத செயல்களைக் அறிக்கையிடுவோம்,” என்று அவர் கூறினார்.

 

நாடளாவிய ரீதியில் 80 கண்காணிப்பாளர்கள்

இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாதது குறித்து வினவியபோது, ​​தேர்தல் காலம் முழுவதும் பூரண ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக பொலிஸாருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

“தேர்தலில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு முன்பு வேட்பாளர்கள் அவர்கள் வாக்களிக்கும் எண்களுடன் தயாராக இருக்குமாறு வாக்காளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

தேர்தல் கண்காணிப்பை வலுப்படுத்த தேர்தல் ஆணையம் உள்ளூர் மேற்பார்வையாளர்கள் மற்றும்  தமது குழுவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகச் செயற்படும் வகையில், 80 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version