Home இலங்கை அரசியல் சிக்கப்போகும் நாமல்: ஆரம்பமான விசாரணை – நீதிமன்றில் அறிவிப்பு

சிக்கப்போகும் நாமல்: ஆரம்பமான விசாரணை – நீதிமன்றில் அறிவிப்பு

0

நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் ரூ.70 மில்லியன் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, விசாரணைக்காக குறித்த வழக்கின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட பொதுஜன பெரமுன (SLPP)நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

இதன்போது, இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனி விசாரணையை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, கிரிஷ் நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் தனது நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்கை ஜூன் 4 ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version