Home முக்கியச் செய்திகள் அடுத்தடுத்து மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள்..! தொடரும் விசாரணை

அடுத்தடுத்து மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள்..! தொடரும் விசாரணை

0

பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிஷாந்த உலகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் இவரது கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏனைய கடற்படை தளபதிகள்

இந்த நிலையில், உலகேதென்ன உட்பட முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, சோமதிலக திசாநாயக்க மற்றும் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் குறித்தும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

https://www.youtube.com/embed/F1eRIPa04pc

NO COMMENTS

Exit mobile version