Home முக்கியச் செய்திகள் தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை : வெளியான புதிய தகவல்

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை : வெளியான புதிய தகவல்

0

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

நிலையியற் கட்டளைகளின்படி, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புக்கொண்ட ஒரு நீதிபதியையும் ஒரு நிபுணரையும் தலைமை நீதிபதி இந்தக் குழுவிற்கு நியமிக்க வேண்டும். 

தேசிய காவல்துறை ஆணைக்குழு

மேலும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் கட்டாய உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். 

அதன்படி, இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடபளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

https://www.youtube.com/embed/es20bhYqxQg

NO COMMENTS

Exit mobile version