Home இலங்கை அரசியல் காணி பகிர்ந்தளிப்பில் முறைகேடு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

காணி பகிர்ந்தளிப்பில் முறைகேடு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0

2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasingha) தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “காணி சீர்திருத்த ஆணைக்குழு (LRC) மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் யாருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது? என்ன திட்டங்களுக்கு? எந்த அடிப்படையில்? என்பது தொடர்பில் விசாரணை முடியும் வரை எல்ஆர்சி மூலம் காணி வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

கூடிய விரைவில் இந்த விசாரணையை நடத்தி இந்த காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் ஊழல் நடந்துள்ளதா? என்பதைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version