Home இலங்கை அரசியல் மகிந்த ஆட்சியின் சர்ச்சைக்குரிய விமான சேவை தொடர்பில் விசாரணை

மகிந்த ஆட்சியின் சர்ச்சைக்குரிய விமான சேவை தொடர்பில் விசாரணை

0

Courtesy: Sivaa Mayuri

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய, விமான சேவையான மிஹின் லங்காவின் நிதிப் பொறுப்புகள் தொடர்பில், இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், மிஹின் லங்காவின் தீர்க்கப்படாத நிலையை நிவர்த்தி செய்வதை விட எதிர்வரும் சுற்றுலாப் பருவத்திற்கான தயாரிப்புகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் 

2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி தனது செயற்பாடுகளை நிறுத்திய மிஹின் லங்கா, தமது நிறுவன செயல்முறையுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க கடன்களை இன்னமும் தீர்க்கவில்லை.

விரைவில் விசாரணை

நிதி அமைச்சகத்தின், ஆண்டு நிதி நிலை அறிக்கையின்படி, 2024 ஜூன் 30 வரை, மிஹின் லங்கா லிமிடெட்டின் கீழ் 3,201.77 மில்லியன் ரூபாய்கள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், இது தொடர்பில் விசாரணைகள், மிக விரைவில் நடத்தப்படும் என்று சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version