Home முக்கியச் செய்திகள் பத்மேவுடனான தொடர்பு: பியூமி ஹன்சமாலியிடம் சி.ஐ.டி விசாரணை

பத்மேவுடனான தொடர்பு: பியூமி ஹன்சமாலியிடம் சி.ஐ.டி விசாரணை

0

தற்போது தடுப்புக்காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடனான உறவு தொடர்பில் தென்னிலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பியூமி ஹன்சமாலியிடம் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து பியூமி ஹன்சமாலிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டதையடுத்து நேற்றைய தினம் (21.10.2025) அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலம்

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பியூமி ஹன்சமாலியிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கெஹல்பத்தர பத்மேவுடனான அவர்களின் உறவு தொடர்பில் மேலும் பல தென்னிலங்கை நடிகைகளிடம் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பியூமி ஹன்சமாலி

தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகையான பியூமி ஹன்சமாலி நேற்றைய தினம் (21.10.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறிய பின்னர், தான் தனிப்பட்ட முறைப்பாடொன்றை வழங்குவதற்காக வந்திருந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், அதிகளவான நேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தரித்திருந்தமையை ஊடகங்கள் கேள்வியெழுப்பியிருந்தன.

அதற்கு பதிலளித்த பியூமி ஹன்சமாலி, “எல்லாவற்றையும் கூற வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை, எதிர்வரும் நாட்களில் அனைத்தையும் வெளிப்படுத்துகிறேன்.” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version