பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு
எதிரான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தொடர்ந்தும் தமது
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான இந்தக்குழு இதுவரை நான்கு
தடவைகளாக கூடி, 28 அரசு தரப்பு சாட்சியங்களை பெற்றுள்ளது.
சாட்சிகள்
இன்னும் இரண்டு சாட்சிகள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பிறகு
சாட்சியமளிக்கவுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த குழு, 2025 ஜூன் 23 திங்கட்கிழமை மீண்டும் கூடி, ஜூன் 25
புதன்கிழமை வரை விசாரணைகளைத் தொடரவுள்ளது.
இதன்போது பொலிஸ் தரப்பில் இருந்து 15 சாட்சிகள் தமது வாக்குமூலங்களை
வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
