Home இலங்கை சமூகம் கதிர்காமம் வரும் பக்தர்களுக்காக குமண நுழைவாயில் திறப்பு!

கதிர்காமம் வரும் பக்தர்களுக்காக குமண நுழைவாயில் திறப்பு!

0

கதிர்காமக் கந்தனை வழிபட பாதயாத்திரையில் வரும் வடக்கு மற்றும் கிழக்கு பக்தர்களின் நலன் கருதி இன்று யால வனப்பூங்காவின் கிழக்கு நுழைவாயிலான குமண நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பக்தர்களின் நலன் கருதி இந்தப் பாதை திறக்கப்படும் என்று யால வனப்பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கதிர்காமக் கந்தன் வழிபாடு 

கதிர்காமக் கந்தனை வழிபட வடக்கு மற்றும் கிழக்கு பக்தர்கள் வருகை தரும் பாதயாத்திரையே இந்நாட்டின் மிக நீண்ட மற்றும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட பாதயாத்திரையாகும்.

கதிர்காமக் கந்தனுக்காக தாங்கள் மேற்கொண்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் நோக்கில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை இந்த யாத்திரிகர்கள் பாதயாத்திரையாக கடந்து கதிர்காமத்தை வந்தடைகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version