Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0

Courtesy: Sivaa Mayuri

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் செலவின ஒழுங்குமுறையின் கீழ் முறையான செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பல வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மோசடி விசாரணைப் பணியகம் (FIB) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று  அறிவித்துள்ளது.

சட்டம்.

தேர்தல் செலவுச் சட்டத்தை பின்பற்றாதது தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த 7 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணையின் போதே இன்று நீதிமன்றத்தில்,  மோசடி விசாரணை பணியகம் தமது நிலைப்பாட்டை அறிவித்தது.

தேர்தல் செலவு

 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் எண். 03 இன் கீழ், அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தேர்தல் தொடர்பான செலவுகள் குறித்த விரிவான அறிக்கைகளை அக்டோபர் 13 ஆம் தி திக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இருப்பினும், சில வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் இன்னும் தேவையான அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை, இது சட்டத்தை மீறுவதாகும் என்று, பணியகம் மன்றில் சுட்டிக்காட்டியது,.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுவதற்கு திகதியை நிர்ணயம் செய்யுமாறும் நீதிமன்றத்திடம், பணியக அதிகாரிகள் கோரினர் .

அதன்படி, முழுமையான விசாரணையை நடத்தி முன்னேற்ற அறிக்கையை 2025 மார்ச் 14 அன்று சமர்ப்பிக்குமாறு, மோசடி விசாரணை பணியகத்துக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version