Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் : அமைச்சர் அறிவிப்பு

0

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (01) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி தெரிவு 

இதேவேளை புதியஅரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அரசியல்அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டதும் அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்காக மக்கள் முன் சமர்ப்பிப்போம்.

அத்துடன் சமீபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வை பொறுத்தவரை புதிய அரசமைப்பை உருவாக்கி மக்களின் முன்னால் சர்வஜன வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிப்போம் என எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக தெரிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version