அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பிலேயே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் அமையவுள்ளது.
அழைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள்
இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
