Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்திற்குள் நுழைய ரணிலுக்கு அழைப்பு

நாடாளுமன்றத்திற்குள் நுழைய ரணிலுக்கு அழைப்பு

0

எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம்
முன்வைக்கப்பட்டுள்ளதாக என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் பயணம்

எனினும், நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் தன்னிடம் இல்லை என்றும்,
நாடாளுமன்றத்துக்கு வெளியில் அரசியல் பயணம் தொடரும் என்றும் ரணில்
அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் தேசியப் பட்டியல் எம்.பி.
பதவியைத் துறப்பதற்குத் தயார் என ரவி கருணாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா
ஆகியோர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version