ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற 17
சீசன்களில், 10 சீசன்களில் 400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தொடர்ந்து பல போட்டிகளில் தோல்வி கண்டு வந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கோலியின் சாதனை
இந்த நிலையில், இன்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது.
மோசமான சாதனையை படைத்த குஜராத் அணி வீரர்
அதிகபட்சமாக விராட் கோலி 51 ஓட்டங்களையும் பட்டிதார் 50 ஓட்டங்களையும் குவித்துள்ளார். இதன்போது, அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐபிஎல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.
தொடர் சாதனைகள்
அந்த வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.
உலக கிண்ண ரி20 தொடர் : தூதுவராக உலகின் அதிவேக மனிதன் நியமனம்!
2015 ஆம் ஆண்டு 505 ஓட்டங்களும், 2016 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 973 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 14 போட்டிகள் விளையாடிய விராட் கோலி, 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ஓட்டங்களும் 2020 ஆம் ஆண்டு 466 ஓட்டங்களையும் எடுத்திருக்கிறார்.
2021 ஆம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ஓட்டங்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ஓட்டங்களையும் விராட் கோலி குவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல்லின் 17 ஆவது சீசனில் 400-க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |