Home உலகம் சற்றுமுன்னர் வெளியான தகவல் : ஈரானில் தாக்குதல் 10 காவல்துறையினர் பலி

சற்றுமுன்னர் வெளியான தகவல் : ஈரானில் தாக்குதல் 10 காவல்துறையினர் பலி

0

ஈரானின் (iran) தென்கிழக்கு பகுதியில் உள்ள தஃப்டானில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 10 எல்லைக் காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு, சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோஹர்கோ, தஃப்தான் நகரத்தில் எல்லை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆயுதக் கும்பல்கள் தாக்கியதில் 10 எல்லைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் காவல்துறை தகவல் மையம்

சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் காவல்துறை தகவல் மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இது தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை விசாரிக்க ஈரான் உள்துறை அமைச்சர் ஒரு குழுவை நியமித்துள்ளார்.

தஃப்தான் நகரம் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் நகரங்களில் ஒன்றாகும், இது நூக்காபாத் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/iran-10-border-guards-dead-1729951729

NO COMMENTS

Exit mobile version