கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
வான்வெளி தற்காலிகமாக பூட்டு
இதனையடுத்து, கட்டார் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியதாக அறிவித்தது.
இந்நிலையில், கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நடந்து வரும் ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பாக கட்டார் அதிகாரிகள் வெளியிட்ட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆலோசனைகளை கண்காணித்து செயல்படுமாறு தூதரகம் இலங்கையர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
https://www.youtube.com/embed/5VZ6eAaOE0E
