Home இலங்கை சமூகம் பெட்ரோல் இல்லை!! ஈரான் – இஸ்ரேல் மோதலால் இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெட்ரோல் இல்லை!! ஈரான் – இஸ்ரேல் மோதலால் இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலை உலகளாவிய ரீதியில் எரிபொருளின் விலையில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.

இதன் காரணமாக அதிகளவான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுப்பதுடன், அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்து சேமித்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

நீண்ட வரிசை

இந்த நிலையில், இலங்கையில் பல பகுதிகளில் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள்  மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

இதன்படி,  வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்
எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நேற்றையதினம் மாலை காத்திருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா  நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல்நோக்கு
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை
பெற்றுக்கொள்ள மக்கள் அதிகளவில் கூடிவருவதால், எரிபொருள் நிலையங்களில் நீண்ட
வரிசைகள் ஏற்பட்டுள்ளன. 

மேலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில நிலையங்களில் இங்கு பெட்ரோல் இல்லை என்ற செய்திப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version