Home முக்கியச் செய்திகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அவசர அறிவிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அவசர அறிவிப்பு

0

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) வெளியிட்டுள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை 

அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

போதுமான எரிபொருள் இருப்பு இருந்த போதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this

https://www.youtube.com/embed/lub-b1MWvp0

NO COMMENTS

Exit mobile version