Home உலகம் ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ள ஈரான்

ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ள ஈரான்

0

ஈரான் (Iran), ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆளும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு அச்சமூடுவதற்காக, எதிர்ப்பாளர்களை பொது இடங்களில் கொல்ல ஈரானின் உச்ச தலைவரான அலி கா மேனி (Ali Khamenei) உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1988 ஆம் ஆண்டு, ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்தொல்லா கோமேனி, பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளைக் கொல்ல உத்தரவிட்டார்.

ஈரான் அரசு 

இதனடிப்படையில் நாடு முழுவதும் ஐந்து மாதங்களில் சுமார் 30,000 பேர் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா பொதுச்சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மீண்டும் அதேபோன்றதொரு படுகொலையை அரங்கேற்ற ஈரான் அரசு திட்டமிட்டுவருவதாக, 25 ஆண்டுகளாக ஈரானால் சிறையிலடைக்கப்பட்டுள்ள நபரொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக அவரது சிறை அறையிலிருந்து இழுத்துச் சென்ற சிறை அதிகாரிகள், அவரை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, ஈரான் அரசை எதிர்த்துவந்த மெஹ்தி ஹசானி (Mehdi Hassani-48) மற்றும் பெஹ்ரூஸ் எஹ்சானி (Behrouz Ehsani-70) எனும் இருவருக்கு நேற்று திடீரென மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version