Home இலங்கை அரசியல் ஈரான் அதிபரின் வருகை நிச்சயம் : உறுதியளித்தார் அலி சப்ரி

ஈரான் அதிபரின் வருகை நிச்சயம் : உறுதியளித்தார் அலி சப்ரி

0

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) எம்மால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரானின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

இஸ்ரேல், ஈரான் இடையே போர்

இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு நாம் அழைப்பினை விடுத்திருந்தோம்.

இந்நிலையில், அவருடைய அழைப்புக்கு தற்போது வரையில் எவ்விதமான மறுப்புக்களும் வெளியிடப்படவில்லை.

ஈரானின் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்: வெளியானது செயற்கைக் கோள் புகைப்படம்

ஈரான், இலங்கை உறவு  

அத்துடன், அவருடைய வருகைக்கான முன்னாயத்தப் பணிகள் நாட்டினுள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், திட்டமிட்டபடி உமா ஓயா பல்நோக்கு அவிருத்தி திட்ட ஆரம்பமும், ஈரான், இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையிலான முக்கிய கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், இலங்கை அரசாங்கமானது அணிசேராக் கொள்கையுடன் அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு, பல்தரப்பு உறவுகளைப் பேணிவருகின்றது.

ஆகவே, ஈரான் அதிபரின் வருகையினால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று கரிசனைகளைக் கொள்ளவேண்டிய அவசியமில்லை“ என தெரிவித்தார்.

ஈரானைத் தாக்கிய இஸ்ரேலும் சதி செய்யும் அமெரிக்காவும்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version