அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு (USA) ஈரான் அடிபணியாது என்று ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலிகொமெய்னி தெரிவித்துள்ளார்.
மத நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது.
அணு சக்தித் திட்டம்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.
அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சினை என ஈரானிய உச்ச தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈராக்கிலிருந்து தனது படைகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளதாக அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திசையில் ஒரு படியாக, ஐன் அல்-அசாத் மற்றும் விக்டோரியாவில் உள்ள தனது இராணுவ தளங்களை உடனடியாக திரும்பப் பெற அமெரிக்கா உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
