Home இலங்கை அரசியல் ரணிலின் எமக்கெதிரான செயற்பாடுகளை மறந்து நீதிக்காக போராடுகிறோம்! சஜித் பிரேமதாச

ரணிலின் எமக்கெதிரான செயற்பாடுகளை மறந்து நீதிக்காக போராடுகிறோம்! சஜித் பிரேமதாச

0

நாட்டின் நீதித்துறை செயல்முறையை நாங்கள் மதிக்கின்றோம், ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்கு அவற்றை பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (25) காலை மீண்டும் ஒருமுறை பார்வையிட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்திசாலைக்கு முன்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிகிச்சை 

தொடர்ந்து பேசிய அவர்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் காலங்களில் எங்களுக்கு எதிராக செயற்பட்டார்.ஆனால் அதெல்லாம் வேறானது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதை பொருட்படுத்த முடியாது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருக்கின்றனர்.
அவர்களின் செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம்.இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே சில பிரிவுகள் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது கவலைக்குரியது.

அத்துடன் நாட்டின் சுயாதீன நீதித்துறையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், ரணில் விக்ரமசிங்க நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது, ​​நீதியான மற்றும் சுயாதீனமான தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version