முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முகநூல் பதிவில் வெளியிடப்பட்ட பதிவொன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
குறித்த பதிவானது 2014.11.11 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், “ஒரு அரசனுக்கு என்ன திறமை இருந்தாலும், அவரது இராச்சியத்தின் மனிதர்கள் அரசாங்கத்தின் செல்வத்தைத் திருடி வீணடித்தால், அந்த மன்னன் அந்த பதவியில் இருக்கத் தகுதியற்றவன்”
என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதி துஷ்பிரயோகம்
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ரணில் முன்னதாக வெளிப்படுத்திய நற்சிந்தனை அவரது வாழ்விலும் ஒரு மாறுதலை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
