Home உலகம் வான்வெளி இலக்கான இஸ்ரேலிய ஊடகம்: ஈரான் தொடங்கும் பதிலடி

வான்வெளி இலக்கான இஸ்ரேலிய ஊடகம்: ஈரான் தொடங்கும் பதிலடி

0

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) “பிரச்சார தொலைகாட்சி” என்று குற்றம் சாட்டப்படும் இஸ்ரேலின் “சனல் 14” செய்தி நிலையத்தின் அலுவலகங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனை ஈரானின் அரசு நடத்தும் இஸ்லாமிய குடியரசு ஈரான் ஒளிபரப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் (Iran), தொலைக்காட்சி அலுவலகங்களை வரும் நாட்களில் குறிவைத்து தாக்குதல் நடத்தும் என்றும் அனைத்து தொழிலாளர்களையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதப் படை

திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் வளாகத்தைத் தாக்கியது ,

அதை ஈரானிய ஆயுதப் படைகளால் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு மையம் என்று இஸ்ரோல் குற்றம் சுமத்தியது.

இதன்போது தனது ஊழியர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இதற்கு பலிவாங்கும் நகர்வை ஈரான் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version