Home முக்கியச் செய்திகள் ஒரே ஒரு அதிஷ்ட இலாப சீட்டில் கால்பந்துவீரர், பொப் பாடகியை விடவும் பணக்காரரான நபர்

ஒரே ஒரு அதிஷ்ட இலாப சீட்டில் கால்பந்துவீரர், பொப் பாடகியை விடவும் பணக்காரரான நபர்

0

ஒரே ஒரு அதிஷ்ட லாப சீட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அதிஷ்ட லாப வெற்றியாகும்.

அயர்லாந்து தேசிய அதிஷ்ட இலாப நிறுவனம், வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, தமது தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கால்பந்து வீரர், பொப்பாடகியை பின்னுக்கு தள்ளியவர்

இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பொப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.

இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version